அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சீசன் 2 டிரெயிலர் வெளியானது

இ.ஏ. நிறுவனத்தின் பிரபல அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேமின் புதிய சீசன் ஜூலை 2 ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி புதிய சீசனிற்கான டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய டிரெயிலர்களின் படி அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சீசன் 2 கேமில் வாட்சன் என்ற பெயரில் புதிய கதாபாத்திரம், எல்-ஸ்டார் எனும் புதிய ஆயுதம் மற்றும் மேப்பில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

மேலும் அதிகாரப்பூர்வ டிரெயிலர்களின் படி புதிய சீசன் பேட்டில் சார்ஜ் (Battle Charge) எனும் தலைப்பை கொண்டுள்ளது. இதில் கிங் கேன்யான் மேப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் இந்த கேமில் மான்ஸ்டர்கள் மற்றும் லெவிதியன் பீஸ்ட்கள் வருவதும், ரெப்பல்சன் டவரும் இடம்பெற்றிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர கேமில் புதிய ஸ்கின்கள், மிட்-ஏர் எமோட்ஸ் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய கேமில் தினசரி மற்றும் வாராந்திர சவால்கள் மற்றும் பரிசுகளை கொண்டிருக்கும்.