இனி ரெட்மி நோட் 7 ப்ரோ வாங்க காத்திருக்க வேண்டாம்

சியோமியின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7 ப்ரோ டாப் எண்ட் மாடல் இந்தியாவில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளங்களுக்கு சென்று ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும். ரெட்மி நோட் 7 ப்ரோ ஓபன் சேல் ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என சியோமி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஜூன் 30 ஆம் தேதி வரை ப்ளிப்கார்ட் மற்றும் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ரெட்மி நோட் 7 ப்ரோ வாங்கிடலாம். இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ டாப் எண்ட் (6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, நெபுளா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஓபன் சேல் இன்று (ஜூன் 28) மதியம் 12.00 மணிக்கு துவங்கியது. ஓபன் சேல் மூலம் ரெட்மி நோட் 7 ப்ரோ வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ சலுகையும் வழங்கப்படுகிறது.

இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ. 198 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் சலுகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 1120 ஜி.பி. கூடுதல் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமராவும், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.