வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஸ்மார்ட் சாதனங்களில் டார்க் மோட் தற்போதைய டிரெண்டிங் அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் புதிதாக டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு கியூ தளத்தில் டார்க் தீம் வழங்கி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனமும் ஐ.ஒ.எஸ். 13 இல் டார்க் மோட் வசதியை வழங்கியுள்ளது. டார்க் மோட் அம்சம் திரை முழுக்க கருப்பு நிறத்தில் மாற்றி எழுத்துக்களை வெள்ளை நிறத்தில் காண்பிக்கும். டார்க் மோட் பயன்படுத்தும் போது சாதனத்தின் பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க முடியும்.

வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பீட்டா பயனர்களுக்கு விரைவில் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. எனினும், வாட்ஸ்அப் செயலியில் இப்போதே டார்க் மோட் பயன்படுத்த முடியும். இதனை எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

ஐபோன் வாட்ஸ்அப்பில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஐபோனில் வாட்ஸ்அப் டார்க் மோட் ஆக்டிவேட் செய்ய முதலில் உங்களது சாதனம் ஐ.ஒ.எஸ். 11 அல்லது அதன் பின் வெளியான இயங்குதளம் கொண்டிருக்க வேண்டும். ஐ.ஒ.எஸ். தளத்தை அப்டேட் செய்ய சாதனத்தின் செட்டிங்ஸ் — ஜெனரல் – சாஃப்ட்வேர் அப்டேட் உள்ளிட்ட ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

1 – ஐ.ஒ.எஸ். சாதனத்தை அப்டேட் செய்ததும் செட்டிங்ஸ் — ஜெனரல் — அக்சஸபிலிட்டி — டிஸ்ப்ளே — அகோமடேஷன்ஸ் — இன்வெர்ட் கலர்ஸ் — ஸ்மார்ட் இன்வெர்ட் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

2 – மேலே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியதும் இன்டர்ஃபேஸ் முழுக்க டார்க் தீம் ஆக்டிவேட் செய்யப்படும்.

3 – முழுமையான டார்க் மோட் அனுபவத்தை பெற வாட்ஸ்அப் சாட் விண்டோவின் வால்பேப்பரை மாற்ற வேண்டும். டார்க் பேக்கிரவுண்டை பயன்படுத்தினால் டார்க் மோட் அனுபவம் பெற முடியும்.

ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப்பில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு தளத்தின் வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் பயன்படுத்த ஆண்ட்ராய்டு கியூ பீட்டா அப்டேட் பயன்படுத்த வேண்டும். தற்சமயம் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா அப்டேட் கூகுள் பிக்சல் மற்றும் 15 இதர சாதனங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மென்பொருள் அப்டேட் அதிவேகமாக வழங்கப்படுவதில்லை என்பதால், ஆண்ட்ராய்டு பயனர்கள் டார்க் மோட் பயன்படுத்த காத்திருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

1 – முதலில் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் — டிஸ்ப்ளே — தீம் — டார்க் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். புதிய ஆண்ட்ராய்டு கியூ தளத்தில் டார்க் மோட் இப்படி தான் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

2 – ஆண்ட்ராய்டில் டார்க் தீம் ஆக்டிவேட் செய்ததும், டெவலப்பர் ஆப்ஷன்களை வழங்க வேண்டும். இவ்வாறு செய்ய செட்டிங்ஸ் — அபவுட் போன் — பில்டு நம்பர் பட்டன் மீது சிலமுறை தொடர்ச்சியாக க்ளிக் செய்ய வேண்டும். இனி டெவலப்பர் ஆப்ஷன் ஆன் செய்யப்பட்டிருப்பதை உணர்த்தும் தகவல் திரையில் தோன்றும்.

3 – டெவலப்பர் ஆப்ஷன் எனேபிள் செய்யப்பட்டதும் ஓவவர்ரைடு ஃபோர்ஸ் டார்க் (Override force-dark) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் வாட்ஸ்அப் செயலியில் டார்க் தீம் ஆக்டிவேட் ஆகியிருக்கும்.

4 – மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்கள் ஆண்ட்ராய்டு கியூ தளத்தின் வாட்ஸ்அப் செயலியில் டார்க் தீமை ஆக்டிவேட் செய்யும். எனினும் முழுமையான டார்க் மோட் அனுபவத்திற்கு டார்க் வால்பேப்பரை பேக்கிரவுண்டாக செட் செய்ய வேண்டும்.