ரூ. 4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

இந்தியாவில் கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ. 4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கிடைக்கும் சலுகையை பெற பயனர்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும். இத்துடன் பிரீபெயிட் பரிமாற்றங்களுக்குத் தான் ரூ. 4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் தள்ளுபடியின்றி பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் ரூ. 39,000-க்கும் பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போன் ரூ. 44,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பிரீபெயிட் பரிமாற்றங்களை மேற்கொள்வோர் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனினை ரூ. 35,999-க்கும், பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போனினை ரூ. 40,999 விலையிலும் வாங்க முடியும்.

இரு கூகுள் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி தவிர வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். சிறப்பம்சங்கள்:

பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் FHD பிளஸ் 18.5:9 டிஸ்ப்ளேவும், பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD பிளஸ் 18:9 டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. இரு டிஸ்ப்ளேக்களும் டிராகன்டிரெயில் கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போன்களில் 10 என்.எம். ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுளின் டைட்டன் எம் பாதுகாப்பு சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க இரு ஸ்மார்ட்போன்களிலும் 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 3 சீரிசில் வழங்கப்பட்டிருக்கும் சோனி IMX 363 சென்சார் தான் இரு ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்கும் கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை சக்தியூட்ட பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 3ஏ எக்ஸ்.எல். ஸ்மார்ட்போனில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்படுகிறது.