கலர் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சொர் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3,999 விலையில் இந்தியாவில் அறிமுகம்

அமேஸ்ஃபிட் பிப் சாதனத்தை தொடர்ந்து ஹூவாமி பிப் லைட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலில் மல்டி-ஸ்போர்ட் டிராக்கிங், இதய துடிப்பு சென்சார், பில்ட்-இன் ஜி.பி.எஸ். போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் 1.28 இன்ச் 176×176 பிக்சல் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அமேஸ்ஃபிட் பிப் லைட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

அமேஸ்ஃபிட் பிப் லைட் அம்சங்கள்:

– 1.28 இன்ச் 176×176 பிக்சல் கலர் ஆல்வேஸ் ஆன் ரிஃப்லெக்டிவ் டச் டிஸ்ப்ளே
– 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– அழைப்புகள், குறுந்தகவல், மின்னஞ்சல்களுக்கு நோட்டிஃபிகேஷன் வசதி
– மல்டி-ஸ்போர்ட் டிராக்கிங்
– ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார்
– ப்ளூடூத் 4.0 எல்.இ. – ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வசதி
– 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஏர் பிர்ஷர் சென்சார்
– 20 எம்.எம். ஸ்டான்டர்டு விட்த் மாற்றக்கூடிய வாட்ச் பேண்ட்
– வாட்டர், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP68)
– 190 எம்.ஏ.ஹெச். லி-பாலிமர் பேட்டரி

அமேஸ்ஃபிட் பிப் லைட் விலை இந்தியாவில் ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அமேசான் பிரைம் டேஸ் போது நடைபெறுகிறது.