விரைவில் இந்தியா வரும் சியோமி ரெட்மி 7ஏ

இந்த ஆண்டு துவக்கத்தில் சியோமி தனது ரெட்மியை தனி பிராண்டாக அறிவித்து மூன்று ஸ்மார்ட்போன்களை ரெட்மி பிராண்டிங்கில் அறிமுகம் செய்தது. இதில் இரு ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்தியாவில் வெளியாகிவிட்ட நிலையில், தற்சமயம் ரெட்மி 7ஏ பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகலாம் என சியோமி இந்தியா விளம்பர பிரிவு தலைவர் தெரிவித்திருக்கிறார். புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ மாடல்களுடன் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

சீனாவில் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1440 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம் + 16 ஜி.பி. மெமரி, 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி என மூன்று மாடல்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள், PDAF ஃபாஸ்ட் ஃபோகஸ், ஏ.ஐ. பியூட்டி மற்றும் ஏ.ஐ. பேக்கிரவுண்ட் பிளர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் 10 வாட் சார்ஜிங் வசதியும், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2,. ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது.