உலகின் முதல் 5ஜி லேப்டாப் அறிமுகம்

ஷாங்காய் நகரில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் லெனோவோ தனது இசட்6 ப்ரோ 5ஜி எடிஷன் ஸ்மார்ட்போன் மற்றும் உலகின் முதல் 5ஜி லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 5ஜி சேவையை வழங்க லெனோவோ யுனிகாம் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 மோடெம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய இசட்6 ப்ரோ 5ஜி எடிஷனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. புதிய மோடெம் 5ஜி நெட்வொர்க் மற்றும் தற்போதைய 4ஜி எல்.டி.இ. வசதிகளை கொண்டிருக்கிறது.

5ஜி மோடெம் மற்றும் புதிய பேக் பேனல் தவிர லெனோவோ இசட்6 ப்ரோ 5ஜி எடிஷன் சிறப்பம்சங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் அட்ரினோ 640 GPU மற்றும் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் அதிகபட்சம் 512 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி சென்சார், f/1.8, 16 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, 8 எம்.பி. டெலெபோட்டோ லென்ஸ் மற்றும் 2 எம்.பி. சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 32 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0, டுயல் பிரீக்வன்சி ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

லெனோவோ இசட்6 ப்ரோ 5ஜி எடிஷனுடன் லெனோவோ தனது 5ஜி லேப்டாப் மாடலையும் அறிமுகம் செய்தது. இதில் 2.75 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 8cx பிராசஸர், ஸ்னாப்டிராகன் X55 மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 14-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய லேப்டாப் மாடல் தான் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட உலகின் முதல் லேப்டாப் என லெனோவோ நிறுவன துணை தலைவர் சாங் செங் தெரிவித்தார். இதே லேப்டாப் கடந்த மாதம் நடைபெற்ற கம்ப்யூடெக்ஸ் 2019 நிகழ்விலும் காட்சிப்படுத்தப்பட்டது.