வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்க புதிய வசதி

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை மறைத்து வைக்க முடியும். இதனை ஆக்டிவேட் செய்யும் போது ஸ்டேட்டஸ் பகுதியில் இருக்கும் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்கள் மறைந்து போகும்.

மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் புதிய வசதி ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.183 பதிப்பில் காணப்பட்டது. இந்த அம்சம் சோதனை செய்யப்பட இருக்கும் நிலையில், தற்சமயம் இது டிசேபிள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் முழுமையாக உருவாக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளதால், விரைவில் இது முழுமையான சோதனைக்கு வழங்கப்படும்.

இதனால் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பயன்படுத்துவோரும் இந்த அம்சத்தை தற்சமயம் சோதனை செய்ய முடியாது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிதாக வழங்கப்படும் ஹைடு (Hide) பட்டனை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்க முடியும். பின் ஷோ (Show) பட்டனை க்ளிக் செய்து மியூட் செய்யப்பட்ட அப்டேட்களை மீண்டும் பார்க்கலாம்.

புதிய அம்சம் வழங்குவது பற்றி இதுவரை வாட்ஸ்அப் தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சமீபத்தில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வீடியோக்களை சாட் விண்டோவை விட்டு வெளியேறாமல், பார்க்க வழி செய்யும்.

Source: WABetaInfo