விவோவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் அறிமுகம்

ஷாங்காய் நகரில் நடைபெறும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ ஏற்கனவே அறிவித்தப்படி தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் பிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், புதிய ஏ.ஆர். (ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி) கண்ணாடிகள், மற்றும் ஜொவி 2.0 உள்ளிட்டவற்றை அறிவித்தது.

ஐகூ 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் வர்த்தக ரீதியிலான முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக ஐகூ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் கிடைக்கும் என விவோ தெரிவித்துள்ளது. 5ஜி நெட்வொர்க் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் சார்ந்து விவோ பல்வேறு 5ஜி செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.

விவோ சூப்பர் ஃபிளாஷ்சார்ஜ் 120வாட்

விவோ தனது சூப்பர் ஃபிளாஷ்சார்ஜ் 120 வாட் அல்ட்ரா-ஹை பவர் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் யு.எஸ்.பி. டைப்-சி டேட்டா கேபிள் மற்றும் டிராவல் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 0 முதல் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்களையும், முழுமையாக சார்ஜ் செய்ய 13 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

விவோ ஏ.ஆர். கண்ணாடிகள்

விவோ தனது ஏ.ஆர். கண்ணாடிகளை அறிமுகம் செய்தது. இதில் டூயல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, யுனிட்டி பிளஸ் 3DoF டெஸ்க்டாப் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு 3D (முப்பறிமான) முறையில் சீன்களை உருவாக்கி அவற்றை பல்வேறு இன்டராக்டிவ் செயலிகளில் டிஸ்ப்ளே செய்ய முடியும். டூயல் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் இருப்பதால், டேட்டா கேபிளை ஐகூ 5ஜி ஸ்மார்ட்போனுடன் இணைத்து விட்டால், கண்ணாடிகள் தரவுகளை டிஸ்ப்ளே செய்யும். இதில் மொபைல் போன் சாதனம் செயலிகளை தேர்வு செய்யும் அங்கமாக பயன்படுத்த வேண்டும்.

ஜொவி 2.0 ஏ.ஐ.

விவோவின் ஜொவி 2.0 சேவையில் ஐ.ஒ.டி. (IoT) மூலம் இயங்கும் ஜொவி ஐ.ஒ.டி. செயலி, விவோ ஸ்மார்ட்போன்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முன்பை விட ஜொவி 2.0 அதிகளவு மேம்படுத்தப்பட்டு தற்சமயம் இந்த சேவையில் மொத்தம் 18 நிறுவனங்கள், 23 பிரிவுகளில் சுமார் 430 சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.