5ஜி வசதி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மூன்று கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் ஒன்று அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வசதி வழங்கப்படுகிறது.

இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம். முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஆர் சீரிசில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் SM-A908 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் இதில் 5ஜி வசதி இடம்பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது சென்சார் மற்றும் 5 எம்.பி. கேமரா வழங்கப்படலாம். கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி ஏ90 இரு வேரியண்ட்களும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ90 ஸ்டான்டர்டு வேரியண்ட் SM-A905 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

5ஜி வெர்ஷன் போன்றே ஸ்டான்டர்டு மாடலிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி ஏ90 ஸ்டான்டர்டு வேரிண்ட்டும் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது சென்சார் மற்றும் 5 எம்.பி. கேமரா வழங்கப்படலாம்.

ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி ஏ90 சீரிஸ் முன்புற கேமராக்களை கொண்டிருக்காது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக பின்புற சென்சார்கள் சுழலும் அமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இது எந்தளவு சாத்தியமாகும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.