வெளிநாட்டு சேவைகளை நம்ப வேண்டாம் – வாட்ஸ்அப் போன்ற செயலியை உருவாக்க மத்திய அரசு திட்டம்

வாட்ஸ்அப் போன்று தகவல் பரிமாற்ற செயலியை சொந்தமாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் அரசு நிறுவனங்கள் பாதுகாப்பு விஷயங்களில் எவ்வித அச்சமும் இன்றி இயங்க முடியும் என கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக சொந்தமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் அனைத்து வகையான சேவைகளை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு சார்ந்த தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வெளிநாட்டு சேவைகளை பயன்படுத்தாமல் அரசின் சொந்த சேவைகளை இயக்க வேண்டும்.

அனைத்து வித தகவல் பரிமாற்றங்களும் பாதுகாப்பான நெட்வொர்க்கில் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை இந்தியாவிலேயே சேமிக்கப்பட வேண்டும் என அரசு அதிகாரிகள் கருதுகின்றனர். ஹூவாயின் 5ஜி சேவைக்கு தடை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது.

ஹூவாய் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலைமை அனைவரும் அறிநத்தே. இதுபோன்ற சம்பவம் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. எதிர்காலத்தில் இதேபோன்ற நிலைமை நமக்கும் ஏற்பட்டு, அமெரிக்க நிறுவன சேவைகள் இந்தியாவில் குறைக்கப்படும் பட்சத்தில் அனைத்து பணிகளும் முடங்கி போகலாம். இதுபோன்ற சிக்கலை தவிர்க்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அதிகாரிகளும் ஜிமெயில், வாட்ஸ்அப் போன்ற தனியார் சேவைகளை அலுவல் ரீதியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.