ஒரு வருடத்திற்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ரூ. 1,345 விலையில் புதிய சலுகையை கேரளா வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

கேரள வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ. 1,345 சலுகை செப்டம்பர் 19 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரள வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ரூ. 168 பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இச்சலுகையை கொண்டு பயனர்கள் சர்வதேச ரோமிங் சேவையை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

சர்வதேச ரோமிங் வழங்கும் சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தது. இதில் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். போன்று எவ்வித பலன்களும் வழங்கப்படவில்லை.

கேரளா வட்டாரத்திற்கான பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ரூ. 1,345 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. ரிசர்வ் டேட்டாவும் வழங்கப்படுகிறது. எனினும், ரூ. 168 சலுகையை போன்று இச்சலுகையிலும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படவில்லை.