மலிவு விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

ஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான மெட்ஸ் இந்தியாவில் நான்கு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இவற்றில் இன்பினிட்டி ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு வசதி இருப்பதால் இவை கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல லட்சம் செயலிகளை இயக்கும் வசதி கொண்டிருக்கின்றன.

புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள்:

  • 32 இன்ச் (M32E6) ஹெச்.டி. ரெடி ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி.
  • 40 இன்ச் (M50E6) ஃபுல் ஹெச்.டி. ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி.
  • 50 இன்ச் (M50G2) 4K யு.ஹெச்.டி. ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி. (நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்)
  • 55 இன்ச் (M55G2) 4K யு.ஹெச்.டி. ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி. (நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்)
நான்கு ஸ்மார்ட் டி.வி. மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.0 வெர்ஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் டி.வி.க்களில் 4K தரவுகளுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய மெட்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 32 இன்ச், 40 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 12,999, ரூ. 20,999, ரூ. 36,999, ரூ. 42,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.