ரூ. 5,999 விலையில் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் புதிய கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போனில் 5.71-இன்ச் ஹெச்.டி. பிளஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. இத்துடன் குவாட்-கோர் மீடியா டெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர ஃபேஸ் அன்லாக் மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கலர் 3டி கிளாசி பேக் கவர், டூயல் 4ஜி வோல்ட்-இ வசதி மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

கூல்பேட் கூல் 3 பிளஸ் சிறப்பம்சங்கள்
 • 5.71- இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
 • 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
 • IMGPowerVR GE-class GPU
 • 2 ஜி.பி. ரேம், 16 ஜிபி. மெமரி
 • 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • ஆண்ட்ராய்டு 9.0 பை
 • 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
 • 8 எம்.பி. செல்ஃபி கேமரா
 • கைரேகை சென்சார்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத் 4.2
 • 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் செர்ரி பிளாக் மற்றும் ஓசன் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 5,999 என்றும் 3 ஜி.பி. ரேம் மெமரி மாடல் விலை ரூ. 6,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 2 ஆம் தேதி மதியம் 12.00 மணி முதல் அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது.