ரூ. 349 கட்டணத்தில் பிராட்பேண்ட் சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கும் பி.எஸ்என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவிக்க இருக்கிறது. பிராட்பேண்ட் சேவையில் புதிதாக இணஐக்கப்பட்டு இருக்கும் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

ரூ. 349 மற்றும் ரூ. 399 விலையில் கிடைக்கும் இரண்டு பிராட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 499 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. மூன்று புதிய சலுகைகளும் அந்தமான் மற்றும் நிகோபார் தவிர இந்தியா முழுக்க அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட இருக்கின்றன.

பி.எஸ்.என்.எல். மூன்று புதிய பிராட்பேண்ட் சலுகைகளும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. புதிய சலுகைகளில் விலை குறைவாக கிடைக்கும் ரூ. 349 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் டேட்டா வேகம் 1Mbps வேகத்திற்கு மாற்றப்படும்.

டேட்டா மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் நாடு முழுக்க அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை மேற்கொள்ளலாம்.

ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையில் நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். ரூ. 499 பிராட்பேண்ட் சலுகையில் 8Mbps வேகத்தில் தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவு கடந்ததும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இந்த சலுகையிலும் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை கிடைக்கும்.

முன்னதாக பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்ஸ்டார் 300 பிராட்பேண்ட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.