ஜிமெயில் ஆண்ட்ராய்டில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி?

தொழில்நுட்ப சேவைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கொண்டு நம் அன்றாட தேவைகள் மேலும் ஸ்மார்ட் ஆகிவருகின்றன. டெக் துறையின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் என பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை தங்களது சாதனங்களில் மெல்ல புகுத்த துவங்கிவிட்டன.

கூகுள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே தனது ஸ்மார்ட்போன்கள், கேமரா மற்றும் செயலிகளில் புகுத்த துவங்கிவிட்டது. இந்த ஒற்றை தொழில்நுட்பம் மட்டும் சாதனத்தின் ஒட்டுமொத்த பயன்பாடுகளை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்ல்லும் வல்லமையை கொண்டிருக்கிறது.

கூகுள் தனது மின்னஞ்சல் சேவையாயன ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் வசதியை சேர்த்தது. இந்த வசதி மின்னஞ்சல் எழுதுவோருக்கு வார்த்தைகளை டைப் செய்யும் போதே அந்த வாக்கியத்தை நிறைவு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

கணினிகளில் பயன்படுத்தும் ஜிமெயிலின் வெப் வெர்ஷனில் இந்த அம்சம் முதற்கட்டமாக வழங்கப்பட்டது. பின் இந்த அம்சம் ஜிமெயிலின் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்பட்டது. ஆண்ட்ராய்டு ஸ்மாார்ட்போன்களில் ஜிமெயிலின் ஸ்மார்ட் கம்போஸ் வசதியை எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் ஸ்மார்ட்போனில் ஜிமெயில் செயலி அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும். செயலி அப்டேட் செய்யப்பட்டதும், அதனை திறக்கும் போது ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் ஸ்மார்ட்போன் திரையில் தானாக பாப்-அப் ஆகும்.

இதனை ஆக்டிவேட் செய்ய ஸ்மார்ட்போனில் ஜிமெயில் செயலி திரையின் வலதுபுறமாக காணப்படும் `+’ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

செயலியில் தற்சமயம் ஸ்மார்ட் கம்போஸ் பாப்-அப் தெரியும், அதனை நிராகரித்து விட்டு டைப் செய்ய துவங்கவும்.

ஜிமெயில் செட்டிங்ஸ் மூலம் இந்த வசதியை ஆக்டிவேட் அல்லது டி-ஆக்டிவேட் செய்யலாம்.

1 – ஜிமெயில் செயலி திரையின் மேல்பக்கம் இடதுபுறமாக காணப்படும் மூன்று சிறிய கோடுகளை க்ளிக் செய்யவும்.

2 – செட்டிங்ஸ் ஆப்ஷனில் இமெயில் அக்கவுண்ட்டை தேர்வு செய்யவும்.

3 – ஜெனரல் செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஸ்மார்ட் கம்போஸ் வசதியை இயக்கவும்.

4 – இனி ஆப்ஷனில் இருக்கும் டர்ன் ஆன் அல்லது ஆஃப் பட்டன்களில் ஒன்றை க்ளிக் செய்யவும்.