ரூ. 12,490 விலையில் மூன்று பிரைமரி கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ வை12 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், மூன்று பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

கிரேடியன்ட் பேக் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் விவோ வை12 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

விவோ வ12 சிறப்பம்சங்கள்:

– 6.35 இன்ச் 1544×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர்
– 650 மெகாஹெர்ட்ஸ் IMG PowerVR GE8320 GPU
– 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

விவோ வை12 ஸ்மார்ட்போன் அக்வா புளு மற்றும் பர்கண்டி ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மறறும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம், விவோ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.