கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் இந்த அம்சம் அனைவருக்கும் பிடிக்கும்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆக்ஸடு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்களில் சாம்சங் சவுண்ட் ஆன் டிஸ்ப்ளே எனும் தொழில்நுட்பத்தை வழங்கி ஸ்மார்ட்போனின் இயர்பீடை நீக்கலாம் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் அப்ரேச்சர் தொழில்நுட்பத்தை சாம்சங் அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் f/1.5 – f/2.4 என இருவித அப்ரேச்சர்களை தானாக மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் தனது நோட் 10 ஸ்மார்ட்போனில் f/1.5 – f/1.8 – f/2.4 என மூன்று வேரியபிள் அப்ரேச்சர்களை வழங்கும் என கூறப்படுகிறது. புதிய தகவல் ஐஸ் யுனிவர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என்றும் இம்முறை ஹோல் பன்ச் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மத்தியில் இருக்கும் என்றும் கூறப்பட்டது. புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்களுடன் நான்காவதாக ToF ரக சென்சார் ஒன்று வழங்கப்படும் என தெரிகிறது. சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 7 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 / எக்சைனோஸ் 9825 சிப்செட் வழங்கப்படலாம்.

மெமரியை பொருத்தவரை கேலக்ஸி நோட் 10 சீரிசில் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் 1000 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் தனது புதிய நோட் ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் ஆப்ஷனை நீக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Source: IceUniverse