இந்தியாவில் பப்ஜி லைட் பீட்டா முன்பதிவு துவக்கம்

பப்ஜி லைட் வெர்ஷன் குறைந்த திறன் கொண்ட சாதனங்களிலும் கேம் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பப்ஜி லைட் கேம் கடந்த ஆண்டு சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த கேம் விளையாடும் வசதி வழங்கப்பட்டது.

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பப்ஜி லைட் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பப்ஜி லைட் எடிஷன் இந்தியா உள்பட அனைத்து சார்க் நாடுகளிலும் முன்பதிவு செய்யப்படுகிறது. பப்ஜி லைட் எடிஷன் இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபால் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவு செய்யப்படுகிறது.

பப்ஜி லைட் வெர்ஷனுக்கான முன்பதிவு இன்று முதல் 13 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் பப்ஜி லைட் (https://lite.pubg.com/) வலைதளம் சென்று தங்களுக்கான அக்கவுண்ட்டை இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே பப்ஜி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் லாக் இன் செய்தாலே போதுமானது.

பயனர்கள் இந்த தளத்தில் லாக் இன் செய்ததும், நிகழ்வில் கலந்து கொள்ள கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த வலைதளம் பயனர்களை அவரவர் அக்கவுண்ட்டினை ஸ்டீம், எக்ஸ்பாக்ஸ் மற்றும் பி.எஸ்.4 போன்ற அக்கவுண்ட்களில் லின்க் செய்யக் கோரும். பப்ஜி லைட் பீட்டா கேமில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 3.

இவ்வாறு பதிவு செய்வோருக்கு பல்வேறு இன்-கேம் பரிசுகள் வழங்கப்படுகிறது. அனைத்து பயனர்களுக்கும் டைகர் எம்6 மற்றும் சீட்டா பாராஷூட் வழங்கப்படுகிறது. பின் பதிவுகள் 100,000-ஐ கடந்ததும் பப்ஜி அவர்களுக்கு பிளாக் ஸ்கார்ஃப், பன்க் கிளாசஸ், பிளடி காம்பேட் பேண்ட் உள்ளிட்டவற்றை வழங்கும். 200,000-ஐ கடந்ததும் பயனர்களுக்கு கோல்டு பப்ஜி ஸ்கார்ஃப், ஸ்டிரைப்டு லாங்-ஸ்லீவ் ஷர்ட், ரெட் ஸ்போர்ட்ஸ் டாப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த பரிசுகளுக்கான குறியீடு பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

இந்த கேமினை பயனர்கள் உடனடியாக டவுன்லோடு செய்து விளையாட முடியாது. பப்ஜி குழு பீட்டா பதிப்பிற்கான முன்பதிவுகளை மட்டுமே துவங்கி இருக்கிறது. பின் இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு டவுன்லோடு லிண்க் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.