ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் டார்க் மோட் வசதி

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் அதிக பிரபல அம்சமாக டார்க் மோட் உருவாகி வருகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சர், கூகுள் க்ரோம் போன்ற செயலிகளில் ஏற்கனவே டார்க் மோட் வழங்கப்பட்டு விட்டது. வாட்ஸ்அப் நிறுவனமும் தனது செயலியில் டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஜிமெயில் சேவையில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஏ.பி.கே. வெர்ஷனில் கூகுள் தனது ஜிமெயில் சேவையில் டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. புதிய அம்சம் செட்டிங்ஸ் பகுதியில் வழங்கப்படுகிறது.

டார்க் மோட் ஆப்ஷன் தற்சமயம் செட்டிங்ஸ் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. ஜிமெயிலின் இன்பாக்ஸ் மற்றும் சைடு மெனு உள்ளிட்டவை தொடர்ந்து வெள்ளை நிறத்திலேயே காணப்படுகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான ஜிமெயில் 2019.06.09 வெர்ஷனில் டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், டார்க் மோடை ஆக்டிவேட் செய்ய எந்த ஆப்ஷனும் காணப்படவில்லை.

செயலி முழுக்க டார்க் மோட் வேலை செய்யவில்லை என்ற நிலையில், இந்த அம்சம் வெளியாக மேலும் சில காலம் ஆகும் என தெரிகிறது. புதிய அம்சம் கூகுள் பிளே மூலம் வழங்கப்படும் நிலையில், பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை ஏ.பி.கே. முறையில் ஜிமெயில் 2019.06.09 வெர்ஷனை ஏ.பி.கே. மிரர் தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Source: androidpolice