ரூ. 16,999 விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் NB40MAC01 எனும் ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.யின் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 40 இன்ச் நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி.யில் ஹாட்ஸ்டார், யூடியூப் போன்று சுமார் 500-க்கும் அதிக செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஸ்மார்ட் டி.வி. டிஸ்ப்ளே 1920×1080 பிக்சல் ரெசல்யூஷனில் 16 மில்லியன் நிறங்களுடன் வருகிறது. இத்துடன் 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி.யில் மிராகாஸ்ட் வயர்லெஸ் காஸ்டிங் தொழில்நுட்பம் மற்றும் இ-ஷேர் செயலி வழங்கப்படுகிறது.

புதிய டி.வி.யில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சென்சி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு 10 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்களும், இரண்டு யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட்களும், இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஈத்தர்நெட் போர்ட், வைபை கனெக்டிவிட்டி, பவர் சேவிங் மோட், ஸ்மார்ட் ரிமோட், நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு பிர்தேயக பட்டன் உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட் டி.வி.யின் இதர அம்சங்கள் ஆகும். நோபிள் ஸ்கியோடோவின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக மையங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.