25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. மோட்டோரோலா ஒன் விஷன் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9609 பிராசஸர், 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா, 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை தெளிவாக வழங்கும்.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த இரு பதிப்புகளுக்கான அப்டேட் நிச்சயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்

– 6.3 இன்ச் 1080×2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர்
– 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் கிரேடியன்ட் மற்றும் பிரான்ஸ் கிரேடியன்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஜூன் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.