அதிகம் சாப்பிட்டால் ஷாக் கொடுக்கும் பிரேஸ்லெட்

அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் பிரேஸ்லெட் உங்களை தீய பழக்க வழக்கங்களில் (தீய பழக்கம் கொண்டிருப்பவர்களை) இருந்து விடுபெற உதவும்.

அதிகளவு ஃபாஸ்ட் ஃபுட் உட்கொள்வது, புகைப்பழக்கம், குடிப்பழக்கம் என நீங்கள் உடனடியாக கைவிட நினைக்கும் அனைத்து விதமான பழக்கவழக்கங்களில் இருந்தும் வெளியேற பேவ்லாக் எனும் பிரேஸ்லெட் சிறப்பாக செயலாற்றுகிறது.

இதனை மணிக்கட்டில் அணிந்திருக்கும் போது, நீங்கள் கைவிட நினைக்கும் பழக்கவழக்கங்களில் ஈடுபட முயற்சித்தால், இந்த பிரேஸ்லெட் ஷாக் (உடலில் மின்சாரத்தை பீய்த்தடிக்கும்) கொடுக்கும்.

இதனால் ஒவ்வொரு முறை அதை செய்யும் போதும், உடலில் மின்சாரம் பாயும். உங்களுடன் அதிக நேரம் செலவிடோவோர், இந்த பிரேஸ்லெட் உடன் கிடைக்கும் செயலியை தரவிறக்கம் செய்து, நீங்கள் தீய பழக்கத்தை செய்ய முயற்சிக்கும் போது அவர்களும் உங்களுக்கு ஷாக் கொடுக்க முடியும்.

பேவ்லாக் பயன்படுத்தும் போது மின்சாரம் மூலம் உங்களது மூளையின் மொழியுடன் பேசலாம். இதனால் செய்ய தவிர்க்கும் காரியத்தில் ஈடுபட முயற்சித்தால், ஷாக் உதவியுடன் மனதைக் கட்டுப்படுத்தி தீய பழக்கத்தில் இருந்து விடபட முடியும். இந்த பிரேஸ்லெட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 முறை ஷாக் கொடுக்கும்.

பிரேஸ்லெட் மிக அதிகளவு ஷாக் கொடுக்காமல், உணர்ச்சியால் உங்களை துள்ளி குதிக்க வைக்குமளவு கரண்ட் கொடுக்கும். இதனால் தீய பழக்கங்களில் இருந்து எளிதில் விடுபெற முடியும். இந்தியாவில் பேவ்லாக் பிரேஸ்லெட் அமேசான் வலைதளத்தில் கிடைக்கிறது.