இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 புதிய விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் புதிய விவரங்களில் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது. இம்முறை ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ப்ரோடெக்டர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதில் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி ஸ்கிரீன் ப்ரோடெக்டர்களின் கீழ் புறம் வட்ட வடிவ குறியீடு காணப்படுகிறது. இது பெரும்பாலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருக்காக செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மற்ற புகைப்படங்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது.

சாம்சங் தனது கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ரோ என இருவித மாடல்களில் 4ஜி மற்றும் 5ஜி வெர்ஷன்களில் வெளியிடும் என கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 மாடலில் 6.28 இன்ச் டிஸ்ப்ளேவும், கேலக்ஸி நோட் 10 ப்ரோ மாடலில் 6.75 இன்ச் டிஸ்ப்ளேவும் வழங்கப்படலாம்.

கேலக்ஸி நோட் 10 ப்ரோ மாடலுக்கான ஸ்கிரீன் ப்ரோடெக்டர் பார்க்க சற்று பெரிதாகவே காட்சியளிக்கிறது. இது கேலக்ஸி நோட் 10 மாடலை நிச்சயம் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்கிரீன் ப்ரோடெக்டர்களில் ஹோல் பன்ச் பகுதியில் எவ்வித கட்-அவுட்டும் செய்யப்படவில்லை.

முன்னதாக வெளியான விவரங்களில் ஹோல் பன்ச் கேலக்ஸி நோட் 10 மமாடலில் மத்தியில் இருக்கும் என கூறப்பட்டது. இதுதவிர புதிய நோட் 10 ஸ்மார்ட்போன்களில் சாம்சங் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவற்றை நீக்கலாம் என கூறப்பட்டது.

Photo Courtesy: UniverseIce