இந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டு – முன்னணி இடத்தில் ஒப்போ

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (Trust Research Advisory) எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஒப்போ தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 2019 ஆண்டில் ஒப்போ நிறுவனம் ஏழு இடங்கள் முன்னேறி இந்த ஆண்டிற்கான டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரைஸ்டு கேமரா, 10 எக்ஸ் ஹைப்ரிட் சூம், ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் பெசல் லெஸ் டிஸ்ப்ளே உள்ளிட்டவற்றை பட்ஜெட் பிரிவில் வழங்கியது ஒப்போ நிறுவனத்தை முன்னணி இடத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தில் மிகப்பெரும் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை கொண்டிருக்கும் ஒப்போ இந்தியாவில் தனது வியாபாரத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் கிரேட்டர் நொய்டாவிலும் உற்பத்தி ஆலையை வைத்திருக்கிறது.

முன்னதாக சைபர்மீடியா ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிகக்கையில் அதிம் விரும்பப்படும் புதுமை மிக்க மொபைல் போன் பிராண்டாக ஒப்போ தேர்ந்தெடுக்கப்பட்டது.