இனி ஸ்கின் டியுமர் சோதனைக்கு அவ்வளவு நேரம் ஆகாது – புதிய சாதனம் கண்டறிந்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிதாக விர்ச்சுவல் பயோப்சி எனும் வழிமுறையை உருவாக்கி இருக்கின்றனர். இந்த வழிமுறையில் ஆரோக்கியமான தோல் மற்றும் தோலில் ஏற்படும் பல்வித பாதிப்புகளை கண்டறிந்து கொள்ள முடியும். இதை கொண்டு தோல் டியுமர் போன்ற நோய்கள் இருப்பதை எளிமையாகவும், மிகக்குறைந்த காலக்கட்டத்தில் சோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

டியுமர் சோதனைகளை அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களை கொண்டு மேற்கொள்ளும் போது அவற்றால் ஏற்படக்கூடிய அபாயம் குறைவதோடு, நோயாளிகளுக்கும் அதிக சிரமம் இல்லாமல் போகும். புதிய விர்ச்சுவல் பயோப்சி சாதனம் பற்றிய ஆய்வு கட்டுரை இதழாக வெளியிடப்பட்டுள்ளது.

தோல்களில் ஏற்படும் வீக்கத்தின் ஆழம் மற்றும் டியுமர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மிகவேகமாக தீர்மாணிக்க புதிய சாதனம் வழிவகை செய்யும். அதுவும் இந்த வழிமுறையில் ஸ்கால்பெல்களுக்கு மாற்றாக ஆராய்ச்சியாளர்கள் ஒலி அதிர்வுகள் மற்றும் நியர்-இன்ஃப்ராரெட் லைட் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

இந்த வழிமுறையை அதிகபட்சம் 15 நிமிடங்களுக்குள் நிறைவு செய்திட முடியும். இதுதவிர இவ்வாறு செய்யும் போது நோயாளிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. வழக்கமான பயோப்சி முறைகளை விட புதிய வழிமுறை பலமடங்கு மேம்பட்டதாகும். இதுதவிர இதற்கு செலவாகும் தொகையும், அறுவை சிகிச்சை முறைகளுக்கு ஆவதை விட குறைவு தான். என அமெரிக்காவின் டர்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஃபிரெட்ரிக் சில்வர் தெரிவித்தார்.

புதுவித சோதனை முறை வைப்ரேஷனல் ஆப்டிக்கல் கோஹெரன்ஸ் டோமோகிராஃபி (VOCT) என அழைக்கப்படுகிறது. இந்த வழிமுறையில் குறிப்பிட்ட பகுதியின் 3டி மேப் உருவாக்கப்பட்டு தோலினுள் இருக்கும் பாதிப்புகளை லேசர் டயோடு மூலம் கண்டறியப்படுகிறது. இததுவிர ஒலி அலைக்கற்றைகளும் பயன்படுத்தப்படுகிறது. இவை கேன்சர் செல்களை கண்டறியும் திறன் கொண்டவை.