இந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. பின் கடந்த மாதம் இவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2 ஜி.பி. ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.8,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 3 ஜி.பி. ரேம் விலை ரூ.10,290 என மாறி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் முன்னதாக முறையே ரூ.8,990 மற்றும் ரூ.10,790 விலையில் விற்பனை செய்யப்பட்டன.

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் தான் கிடைக்கிறது. இதன் விலையும் ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.10,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையும் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.