ரூ.8,999 விலையில் விற்பனைக்கு வரும் 6 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன்

இன்ஃபினிக்ஸ் பிராண்டை வைத்திருக்கும் டிரான்சிஷன் ஹோல்டிங் நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.8,999 விலையில் விற்பனைக்கு செய்கிறது. இந்த விற்பனை ஜூன் 17 ஆம் தேதி துவங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரே 6 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Infinix-Hot-6-Pro-Blue

இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.19 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18.75:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர்
– 650MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் எக்ஸ் ஒ.எஸ். 5.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12µm பிக்சல்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ், f/2.0
– 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஸ்டீரியோ வைடனிங்
– எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் அக்வா புளு நிறங்களில் கிடைக்கிறது.