கூகுள் மேப்ஸ் சரியாக வழி காண்பிக்கவில்லையா? சரி செய்ய இதை செய்யுங்கள்

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தெரிந்த, ஒருமுறையேனும் பயன்படுத்தும் செயலியாக கூகுள் மேப்ஸ் இருக்கிறது. அன்றாட வாழ்வில், ஏதேனும் சூழலில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்த வேண்டிய கட்டத்தை நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம். கூகுளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் தெருக்களில் வலம் வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மேப்ஸ் வசதியை நமக்கு வழங்கி உதவியிருக்கின்றனர், இன்றும் உதவியாக இருக்கின்றனர்.

எனினும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏதேனும் புதிய இடத்தில் வழிதெரியாமல் சிக்கிக் கொண்டால், அங்கிருந்து அதிகம் அலைந்து திரியாமல் வெளியேறவே மேப்ஸ் சேவையை கூகுள் வழங்கி வருகிறது. மேப்ஸ் சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலேயே, அந்நிறுவனம் இதனை அடிக்கடி அப்டேட் செய்து புதுப்புது வசதிகளை அதில் அவ்வப்போது வழங்கி வருகிறது.

எதுவாயினும், சில சமயங்களில் கூகுள் மேப்ஸ் செயலியும் சீராக இயங்காமல் நம்மை சோதிக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் மேப்ஸ் செயலியை சரி செய்யும் வழிமுறைகளை பார்ப்போம்.

பொதுவாக மேப்ஸ் சேவை சீராக இயங்க கீழே கொடுக்கப்பட்டிருப்பவை அத்தியாவசியமானவை ஆகும். இவற்றில் ஏதேனும் கோளாறு ஏற்படும் பட்சத்தில் மேப்ஸ் சரியாக இயங்காது.

1 – ஜி.பி.எஸ்.: இது சாட்டிலைட்களை பயன்படுத்தி அதிகபட்சம் 20 மீட்டர்களுக்குள் லொகேஷனை கண்டறிந்து விடும்.
2 – வை-பை: அருகாமையில் இருக்கும் வைபை செயலி லொகேஷனை அறிந்து கொள்ள உதவும்.
3 – மொபைல் நெட்வொர்க்கள்: இவை சரியான லொகேஷனை வழங்கும்.

வழிமுறை 1: ஜி.பி.எஸ். கேலிபரேட் ( GPS Calibrate )

மேப்ஸ் சரியான லொகேஷனை காண்பிக்காத போது ஜி.பி.எஸ். கேலிபரேட் செய்வது நல்ல பலன்தரும்.

1 – ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை திறக்க வேண்டும்

2 – கூகுள் மேப்ஸ் செயலியை திறந்ததும், நீங்கள் இருக்கும் பகுதியை சுற்றி நீல நிற புள்ளி காணப்படும். ஒருவேளை அந்த புள்ளி காணவில்லை எனில், தெரியின் கீழ்புறம் இருக்கும் லொகேஷன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். காம்பஸ் கேலிபரேட் ஆகும் வரை எட்டு வடிவில் ஸ்மார்ட்போனை திருப்ப வேண்டும்.

வழிமுறை 2: ஹை அக்யூரசி மோடை (High Accuracy Mode) ஆன் செய்ய வேண்டும்

1 – ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

2 – இனி லொகேஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

3 – லொகேஷன் சர்வீசஸ் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்

4 – இனி மோட் ஆப்ஷனில் ஹை அக்யூரசியை க்ளிக் செய்ய வேண்டும்