ரூ.168 விலையில் சர்வதேச ரோமிங் வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங் சேவைகளை ஆக்டிவேட் செய்ய விரும்பினாலோ அல்லது சர்வதேச ரோமிங்கின் வேலிடிட்டியை நீட்டிக்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனினும், பி.எஸ்.என்.எல். ரூ.168 சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்களும் வழங்கப்படவில்லை. முதற்கட்டமாக இந்த சலுகை கேரளா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சலுகை மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

புதிய பி.எஸ்.என்.எல். சலுகை செப்டம்பர் 9 வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இச்சலுகை விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு பின் இச்சலுகை எடுக்கப்படலாம் என தெரிகிறது. வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். என எந்த பலன்களும் இல்லாத இச்சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.389 விலையில் வெளிநாட்டவர்கள் மற்றும் குறுகிய கால மொபைல் இணைப்பை பெற விரும்புவோருக்கு ஏற்ற சலுகை ஒன்றை அறிவித்தது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.