விரைவில் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி கூகுளின் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ MIUI வலைதள பக்கத்தில் மொத்தம் 11 ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள வசதியை பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் விவரங்கள்

– சியோமி எம்.ஐ. 9

– ரெட்மி கே20 ப்ரோ

– சியோமி எம்.ஐ. 8

– சியோமி எம்.ஐ. 8 ஸ்கிரீன் கைரேகை எடிஷன்

– சியோமி எம்.ஐ. எக்ஸ்புளோரர் எடிஷன்

– சியோமி எம்.ஐ. மிக்ஸ் 2எஸ்

– சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3

– ரெட்மி கே 20

– சியோமி எம்.ஐ. 9 எஸ்.இ.

– ரெட்மி நோட் 7

– ரெட்மி நோட் 7 ப்ரோ

மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 7 சீரிஸ் தவிர மற்றவைகளுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 7 சீரிஸ்-க்கான ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் 2020 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் வழங்கப்பட இருக்கிறது.

சியோமி தற்சமயம் வெளியிட்டிருக்கும் விவரங்கள் சீன சந்தைக்கானதாகும். சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் முதற்கட்டமாக சீனாவில் வழங்கப்படும். அதன்பின் சர்வதேச சந்தையில் வழங்குவது பற்றிய அறிவிப்பை சியோமி வெளியிடும். மேலும் தற்போதைய கால அட்டவணையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என சியோமி தெரிவித்துள்ளது.