இந்தியாவில் ரூ.7,499 விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. அறிமுகம்

ஜெ.வி.சி. நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஆறு எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட் டி.வி.க்கள் பட்டியலில் இவை அறிமுகமாகி இருக்கின்றன.

அந்த வகையில் புதிய டி.வி.யின் ஆரம்ப விலை ரூ.7,499 ஆகும். புதிய டி.வி. மாடல்கள் 24 இன்ச்களில் துவங்கி அதிகபட்சம் 39 இன்ச் வரை கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் புதிய டி.வி.க்களில் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள், ப்ளூடூத் மற்றும் பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய டி.வி. மாடல்களில் ஜெ.வி.சி. 32N3105C மாடல் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் இன்டலெக்ச்சுவல் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. இது பயனர் அதிகம் விரும்பி பார்க்கும் தரவுகளை ஹோம் ஸ்கிரீனில் பரிந்துரைக்கும்.

மேலும் இதன் இன்டர்ஃபேசில் யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் போன்ற சேவைகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. 1366×768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் இந்த டி.வி.யில் அதிக தரமுள்ள வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் இதில் 24 வாட் சவுண்ட் அவுட்புட் வசதி, குவாட்-கோர் பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஸ்கிரீன் காஸ்டிங் வசதி மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள், இன்-பில்ட் வைபை மற்றும் ஈத்தர்நெட் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த டி.வி.யுடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வழங்கப்படுகிறது.

ஜெ.வி.சி.யின் மற்ற ஸ்மார்ட் டி.வி. மாடல்கள்: 32N380C (ரூ. 9,999), ஜெ.வி.சி. 24N380C (ரூ. 7,499), ஜெ.வி.சி. 32N385C (ரூ. 11,999), ஜெ.வி.சி. 39N380C (ரூ. 15,999) மற்றும் ஜெ.வி.சி. 39N3105C (ரூ. 16,999) விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.