இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 4 புகைப்படங்கள்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆக துவங்கிய நிலையில், அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இதில் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க வடிவிலான கேமரா பம்ப் வழங்கப்படுவது உறுதியானது. தற்சமயம் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதிலும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப், ஃபேப்ரிக் கேஸ் மற்றும் பல்வேறு விவரங்கள் தெரியவந்துள்ளன.

Pixel-4-Leak

இணையத்தில் லீக் ஆன புகைப்படங்களை பார்க்க கூகுள் வெளியிட்ட டீசரில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மேல்புறம் மைக்ரோபோன் இடம்பெற்றிருக்கிறது. இந்த பகுதி பெரியதாக இருப்பதால், இதில் முந்தைய பிக்சல் 3 XL மாடலில் வழங்கப்பட்டதை போன்று இரட்டை செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் ஃபேப்ரிக் மூலம் உருவாக்கப்பட்ட கேசில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை கூகுள் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம். புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: 9to5google