இணையத்தில் லீக் ஆன ரியல்மி 4

ரியல்மி பிராண்டின் அடுத்த ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் விவரம் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக மார்ச் மாதத்தில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகமான நிலையில், தற்சமயம் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ரியல்மி தயாராகி இருக்கிறது.

ரியல்மி 4 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்த முடியாது என்ற போதும், புதிய ஸ்மார்ட்போனின் பாக்ஸ் பார்க்க ரியல்மி 3-யை போன்றே காட்சியளிக்கிறது.

மஞ்சள் நிற பேக்கேஜிங்கில் ரியல்மி 4 பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரியல்மி 4 ஸ்மார்ட்போனின் ரென்டர் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இதில் ரியல்மி 4 பிராண்டிங் பார்க்க ரியல்மி 2 போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதனை பார்க்க போட்டோஷாப் செய்யப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது.

இவை தவிர ரியல்மி 4 பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை. தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,999 விலையிலும், 3 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,999 விலையிலும், 4 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.