பயனர் விவரங்களை வெளியிட்ட சர்ச்சையில் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களில் ஷாட் ஆன் ஒன்பிளஸ் (Shot on OnePlus) எனும் செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த செயலி பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கசியவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயலியில் பயனர்கள் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியும். பின் இவை ஒன்பிளஸ் மூலம் சர்வதேச அளவில் வால்பேப்பர்களாக வெளியிடப்படும்.

இந்நிலையில், ஒன்பிளஸ் சர்வெர் மற்றும் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலிக்கு இடையேயான லின்க் ஒன்றின் மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியை பயன்படுத்தியவர்களின் மின்னஞ்சல் பொதுதளத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த பிழையை மே மாத துவக்கத்தில் ஒன்பிளஸ் தெரியப்படுத்தியதோடு இதனை சரி செய்வதற்கான அப்டேட் ஒன்றையும் வெளியிட்டது. ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியை பயனர்கள் வால்பேப்பர்ஸ் மெனு மூலம் இயக்க முடியும். இதனை இயக்க பயனர்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அவரவர் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

புகைப்படங்கள் தேர்வானதும், அவை ஏ.பி.ஐ. மூலம் பொதுவெளியில் வெளியிடப்படும். தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் பயன்படுத்தும் ஏ.பி.ஐ. கொண்டு மற்றவர்களும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த ஏ.பி.ஐ. open.oneplus.net எனும் இணைய முகவரியில் வெளியிடப்பட்டது.

இந்த பிழை எப்போது முதல் இருந்தது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. விண்ணப்பங்கள் வந்ததும், அதனை வெளியிட ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு எவ்வித அவசியமும் இல்லை. பெரும்பாலும் இந்த பிழை, சேவை துவங்கப்பட்டது முதலே இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் பாதுகாப்பு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். மேலும் எங்களுக்கு வரும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மிக கவனமாக ஆய்வு செய்வோம் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏ.பி.ஐ.-களில் சத்தமில்லாமல் சில மாற்றங்களை செய்துள்ளது. எனினும், இவற்றை எளிதில் கடக்க முடியும் என கூறப்படுகிறது.

புதிய பிழை கண்டறியப்பட்டதன் மூலம் பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் இல்லை. அந்த வகையில் இந்த பிழையை ஒன்பிளஸ் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளும் என தெரிகிறது.