ரூ.6000 விலையில் அசத்தல் அம்சங்களுடன் லாவா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்62 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் பட்ஜெட் விலையில் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த இசட்62 கோ எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய லாவா இசட்62 ஸ்மார்டபோனில் 6.0 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் வடிவமைப்பு, குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளமும் 3380 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ் மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஃபேஸ் அன்லாக், ஒ.டி.ஜி. போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. புதிய லாவா இசட்62 ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு மற்றும் ஸ்பேஸ் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

லாவா இசட்62 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் ஃபுல் வியூ IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
– 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE83200 GPU
– 2 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3380 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்தியாவில் லாவா இசட்62 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6060 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 18 ஆம் துவங்குகிறது. புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ததோடு, வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய டி.வி.யை கொடுத்து புதிய இசட்62 ஸ்மார்ட்போனினை இலவசமாக வெல்ல போட்டியையும் லாவா அறிவித்துள்ளது.