பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் மிக அதிகளவில் குறுந்தகவல்களை அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது.

வாட்ஸ்அப் விதிகளை மீறும் வாடிக்கையாளர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் அவர்கள் மீது அந்நிறுவனம் தடை விதிக்கலாம். இந்நிலையில், விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக வாட்ஸ்அப் தற்சமயம் அறிவித்துள்ளது.

தானியங்கி முறையில் குறுந்தகவல் அனுப்புவது மற்றும் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்புவோரும் இவ்வாறு செய்வோருக்கு உதவி செய்பவர்கள் டிசம்பர் 7, 2019 முதல் சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உலகம் முழுக்க பல கோடி பேர் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் செயலி அதிகளவு மற்றும் தானியங்கி முறையில் குறுந்தகவல்களை அனுப்பு உருவாக்கப்படவில்லை. இவ்வாறு செய்வது வாட்ஸ்அப் விதிகளுக்கு எதிரானது ஆகும்.

2019, டிசம்பர் 7 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலியின் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப் விதிகளை மீறும் அக்கவுண்ட்களை கண்டறியும் வழிமுறைகளை மேம்படுத்தி இருக்கிறோம்.

மக்கள் வாட்ஸ்அப் செயலியை கொண்டு வியாபாரங்களுக்கு தொடர்பு கொள்ள விரும்பினர். இதன் காரணமாக வாட்ஸ்அப் பிஸ்னஸ் எனும் செயலி பிரத்யேகமாக துவங்கப்பட்டது. இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்வோம் என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.