இந்தியாவில் ரூ.12,999 விலையில் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

சான்யோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டி.வி. மாடல்கள் சான்யோவின் நெபுளா சீரிசில் அறிமுகமாகி இருக்கின்றன.

புதிய சான்யோ ஸ்மார்ட் டி.வி.க்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. விலை ரூ.12,999 விலையிலும் 43 இன்ச் டி.வி. விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சான்யோவின் புதிய நெபுளா சீரிசில் யூடியூப், நெட்ஃபிளிக்ஸ், ஆண்ட்ராய்டு மிரரிங், ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஃபாஸ்ட் காஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களது மொபைலில் இருக்கும் தரவுகளையும் டி.வி.யில் பார்த்து ரசிக்க முடியும்.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்படுகின்றன. 32 இன்ச் டி.வி.யில் 1366×768 பிக்சல் கொண்ட ஹெச்.டி. பேனல் வழங்கப்பட்டுள்ளது. 43 இன்ச் டி.வி.யில் 1920×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

சான்யோவின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் சியோமி, தாம்சன் மற்றும் ஜெ.வி.சி. உள்ளிட்ட பிராண்டுகளுக்கு போட்டியாக அமையும். சமீபத்தில் ஜெ.வி.சி. இந்தியாவில் ஆறு புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ.11,999 முதல் துவங்குகிறது.