ஆண்ட்ராய்டிற்கு மாற்றாக ஹாங்மெங் இயங்குதளம் தயார் – ஹூவாய் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மாற்றாக ஹாங்மெங் இயங்குதளத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஹூவாய் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

ஹூவாய் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு பிரிவு துணை தலைவர் ஆண்ட்ரூ வில்லியம்சன், ஹாங்மெங் இயங்குதளம் ஏற்கனவே சீனா முழுக்க பல லட்சம் சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான காப்புரிமைகளை ஹூவாய் பெறும் என தெரிவித்தார்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மாற்றாக புதிய தளத்தை வெளியிடுவோம். இதனை ஹூவாய் விரும்பவி்ல்லை. ஆண்ட்ராய்டு குடும்பத்தில் இருப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எனினும், சீனாவில் ஹாங்மெங் இயங்குதளம் சோதனை செய்யப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட பல லட்சம் சாதனங்களில் ஹாங்மெங் நிறுவப்பட்டிருக்கலாம் என அவர் வில்லிம்சன் தெரிவித்தார்.

மேலும் வர்த்தக போர் முழுவீச்சில் ஆரம்பமாகும் பட்சத்தில், ஹாங்மெங் இயங்குதளம் சில மாதங்களில் வெளியீட்டிற்கு தயாராகி விடும் என அவர் தெரிவித்தார்.

ஐ.நா. சர்வதேச காப்புரிமை அலுவலக விவரங்களின் படி, ஹூவாய் நிறுவனம் ஹாங்மெங் இயங்குதளத்திற்கான காப்புரிமை பெற பல்வேறு நாடுகளில் விண்ணப்பித்து இருப்பது உறுதியாகியுள்ளது.