அபினந்தன் 151 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகை அபினந்தன் 151 என அழைக்கப்படுகிறது. ரூ.151 விலையில் கிடைக்கும் இந்த பிரீபெயிட் சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

அபினந்தன் 151 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகள் மும்பை மற்றும் டெல்லி போன்ற வட்டாரங்களிலும் கிடைக்கும் என பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

புதிய சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1 ஜி.பி. அதிவேக 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. சலுகையின் வேலிடிட்டி 180 நாட்கள் என்ற போதும், இதில் அறிவிக்கப்பட்டுள்ள வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை 24 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதனால் 180 நாட்களுக்கு இன்கமிங் அழைப்புகள் மட்டும் தொடர்ந்து வரும். புதிய சலுகையை ஆக்டிவேட் செய்ய பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் PLAN 151 என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். முதற்கட்டமாக இந்த சலுகை தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.