இனி அப்படியில்லை – பயனர் டேட்டாவுக்கு பணம் கொடுக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது ஸ்டடி ஆப் மூலம் பயனர்களுக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது.

ஸ்டடி (Study) ஆப்பை பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பின் வழக்கம் போல ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். பயனர்கள் ஸ்டடி ஆப் இன்ஸ்டால் செய்வதன் மூலம் அவர்களின் டேட்டாவை ஃபேஸ்புக் பயன்படுத்த துவங்கும்.
பயனர் டேட்டாவை இயக்க ஃபேஸ்புக் அவர்களுக்கு சன்மானம் வழங்கும். இதனிடையே ஸ்டடி ஆப் திட்டத்தில் இருந்து பயனர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் அதனை அன்-இன்ஸ்டால் செய்து திட்டத்தில் இருந்து வெளியேறலாம்.
ஃபேஸ்புக் ஸ்டடி திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்க முடியும்.
ஸ்டடி ஆப் விவரங்களை கொண்டு ஃபேஸ்புக்கின் மற்ற சேவைகளை பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்றும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட விவரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இந்த விவரங்களை ஃபேஸ்புக்கின் மற்ற சேவைகளில் பயன்படுத்த மாட்டோம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.