மீண்டும் விற்பனைக்கு வரும் பிளாக் அண்ட் வைட் போட்டோ ஃபிலிம்

புகைப்படத்துறையில் புகழ்பெற்ற பிராண்டாக இருக்கும் ஃபுஜிஃபிலிம் மீண்டும் பிளாக் அண்ட் வைட் போட்டோ ஃபிலிம்களை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மோனோகுரோம் புகைப்பட கலைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்கும் வகையில் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்திருப்பதாக தெரிகிறது.

முதற்கட்டமாக இந்த போட்டோ ஃபிலிம்கள் ஜப்பானில் விற்பனைக்கு வரும். அதன் பின் புகைப்பட கலைஞர்களின் வேண்டுகோறுக்கு ஏற்ப சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.

ஃபுஜிஃபிலிம் நிறுவனம் 1936 ஆம் ஆண்டு மோனோகுரோம் போட்டோ ஃபிலிம்களை விற்பனை செய்ய துவங்கியது. பின் போதிய தட்டுப்பாடு இல்லாமை, உற்பத்திக்கான மூலப்பொருட்கள் கிடைக்காதது போன்ற காரணத்தால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவற்றின் விற்பனையை நிறுத்தியது.

தற்சமயம் அந்நிறுவனம் அக்ரோஸ் சீரிசில் புதிய நியோபான் 100 அக்ராஸ் II ஃபிலிமை அறிமுகம் செய்கிறது. இது 35 எம்.எம். மற்றும் 120 எம்.எம். ஃபார்மேட்களிலும், ஐ.எஸ்.ஒ. 100 வரை கிடைக்கும். புதிய பிளாக் அண்ட் வைட் நியோபான் 100 அக்ராஸ் II ஃபிலிம் விலை இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை.