எதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஸ்மார்ட்போன்களில் 48 எம்.பி. கேமரா வழங்கும் முறை தற்சமயம் பிரபலமாகி வருகிறது. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் துவங்கி தற்சமயம் பட்ஜெட் ரக மாடல்களிலும் 48 எம்.பி. சென்சார் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் கேமரா டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களுக்கு நிகரான துல்லியத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை படமாக்க முடிகிறது.

இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் கேமராக்கள் மேலும் தரம் மிக்கதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. தற்போதைய கேமராக்களில் மெகாபிக்சல்கள் பற்றிய உண்மைத்தன்மை பற்றி குவால்காம் பதில் அளித்திருக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் 48 எம்.பி. கேமராவினை சாத்தியமாக ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் பிராசஸர்களே முக்கிய பங்காற்றுகின்றன. குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்கள் அதிகபட்சம் 48 எம்.பி. வரையிலான இமேஜ் சென்சார்களை சப்போர்ட் செய்யும். இதேபோன்று சமீபத்திய ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்கள் அதிகபட்சம் 192 எம்.பி. சென்சாரை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, 855 மற்றும் 710போன்ற பிராசஸர்களும் 192 எம்.பி. வரையிலான கேமரா சென்சார்களை சப்போர்ட் செய்யும். எங்களது பிராசஸர்களில் அதிகபட்சம் 192 எம்.பி. வரையிலான கேமரா சென்சார்கள் சப்போர்ட் செய்யும். எனினும், ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களல் தற்சமயம் வரை 48 எம்.பி. சென்சார்களையே வழங்குகின்றன.

ஸ்னாப்டிராகன் 845 மற்றும் 710 போன்ற பிராசஸர்களில் ஏற்கனவே 192 எம்.பி. வரையிலான கேமரா வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்சமயம் வெறும் 48 எம்.பி. கேமராவிற்கு ஏன் இத்தனை மோகம் ஏற்பட்டிருக்கிறது?

இதுகுறித்து குவால்காம் கூறும் போது, 192 எம்.பி. சென்சார்களை சப்போர்ட் செய்வதற்கான அப்டேட் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் அவற்றில் ஏற்கனவே 192 எம்.பி. வரையிலான சென்சார்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றன. தற்போதைய 48 எம்.பி. மோகம் பற்றி குவால்காம் அதிகப்படியான விவரங்களை வழங்கவில்லை.

ஸ்மார்ட்போன்களில் தற்சமயம் 48 எம்.பி. கேமரா பிரபலமாகி வருவதை போன்று வரும் காலங்களில் 64 எம்.பி. அல்லது 100 எம்.பி.க்கும் அதிக திறன் கொண்ட கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். முதற்கட்டமாக 64 எம்.பி. கேமராவும், இந்த ஆண்டு இறுதியில் 100 எம்.பி. ரெசல்யூஷன் கொண்ட கேமரா வழங்கப்படும்.