ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக்கோரும் வாட்ஸ்அப் நிறுவனர்

ஸ்டான்ஃபோர்டு மாணவர்களிடத்தில் உரையாடிய வாட்ஸ்அப் இணை நிறுவனர் ப்ரியான் ஆக்டன், மாணவர்களிடம் அவர்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக் கோரினார். இதைத் தொடர்ந்து அவர் ஏன் தனது நிறுவனத்தை ஃபேஸ்புக்கிற்கு விற்றார் என்பது பற்றியும் தெரிவித்தார்.

ஆக்டன் உரையாற்றிய அரங்கில் மாணவர்களுடன் ஃபேஸ்புக்கின் முன்னாள் மென்பொருள் பொறியாளர் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார்.

“நாங்கள் அவர்களிடம் பொறுப்பை கொடுத்தோம். அது தான் தவறான செயலாகி விட்டது. நாம் அவர்களது பொருட்களை வாங்குகிறோம். அவர்களது வலைதளங்களில் சைன்-அப் செய்கிறோம். ஃபேஸ்புக்கை அழித்து விடுங்கள், சரியா?” என ஆக்டன் தெரிவித்தார்.

ப்ரியான ஆக்டன் வாட்ஸ்அப் நிறுவனத்தை ஜான் கௌம் உடன் இணைந்து துவங்கினார். பின் 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் வாட்ஸ்அப் நிறுவனத்தை ரூ.2,200 கோடி கொடுத்து கைப்பற்றியது.

“என்னுடன் 50 பேர் பணியாற்றினர். நான் அவர்களை பற்றியும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பற்றி நினைக்க வேண்டியிருந்தது. மேலும் என் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மற்றும் என்னிடம் இருந்த மிகச்சிறிய பங்குகள் பற்றியும் நினைக்க வேண்டியிருந்தது. நானே நினைத்தாலும், என்னால் முடியாது என சொல்ல முடியவில்லை,” என ஆக்டன் தெரிவித்தார்.

முன்னதாக ஃபோர்ப்ஸ் உடனான பேட்டியில், வாட்ஸ்அப் செயலியில் வணிக நடவடிக்கைகளை எதிர்த்தே ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவதாக ப்ரியான் ஆக்டன் தெரிவித்தார். மேலும் இதற்கென அவர் தன் கையில் இருந்து ரூ.85 கோடியை கொடுத்ததாக தெரிவித்தார்.

“இறுதியில் நான் என நிறுவனத்தை விற்று விட்டேன். நான் என் பயனர்களின் தனியுரிமையை விற்றுவிட்டேன். விருப்பத்திற்காக நான் விட்டுக் கொடுத்தேன். அதை வைத்தை நான் வாழ்ந்து வருகிறேன்,” என அவர் மேலும் தெரிவித்தார்.