5ஜி வந்தாச்சு – உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி ஐந்து கி.மீ தூரத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டிய மருத்துவர்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் 5ஜி மிக முக்கிய பங்காற்றியது. உலகின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது 5ஜி திட்டங்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தன.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கூடியிருந்தவர்களுக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளில் ஒன்று நேரலையில் நிரூபிக்கப்பட்டன. தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ துறைகளில் 5ஜி தொழில்நுட்பத்தை இப்படியும் பயன்படுத்தலாம் என்ற வகையில் அசத்தல் வழிமுறை சாத்தியப்படுத்தப்பட்டது.

முதல் முறையாக மருத்துவர் விழா மேடையில் இருந்தபடி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்த மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையை வழிநடத்தினார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக்க மருத்துவர் வழிமுறைகளை நேரலை வீடியோ மூலம் வழங்கினார்.

5G-Surgery-1

நேரலை வீடியோ என்பதால் மருத்துவரின் குறிப்புக்கள் அதிவேகமாக சென்றடைய 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. 5ஜி தொழில்நுட்பத்தில் மருத்துவர் இருந்த விழா மேடையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த மறுத்துவமனைக்கு வீடியோ 0.01 நொடிகள் எனும் மிகச்சிறிய அளவு வேறுபாடில் ஸ்டிரீம் ஆனது. இதனால் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஸ்கிரீனை பார்த்து ரியல்டைமில் வழிமுறைகளை செய்ய முடிந்தது.

ஏற்கனவே 4ஜி தொழில்நுட்பத்தில் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 4ஜி தொழில்நுட்பம் என்பதால் வீடியோ சென்றடைய 0.27 நொடிகள் தாமதமானது. இதனால் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள், வீடியோவினை அவ்வப்போது நிறுத்தி அதன் பின் அறுவை சிகிச்சை செய்தனர்.

தற்சமயம் 5ஜி வரவு காரணமாக தவிர்க்க முடியாத சூழ்நிலைகளிலும் இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றி இணைய உதவியோடு சாதூர்யமாக செயல்பட்டால் உயிர்களை காக்க முடியும். ப்ரிட்டன், அமெரிக்கா, தென் கொரியா என உலக நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் மிக வேகமாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகி, 2020 ஆண்டு இறுதியில் அதிகளவு பயனர்களை ஈர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2 Comments

Comments are closed.