மெசஞ்சரில் நிலா எமோஜி அனுப்பினால் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகிடும்

ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. பல்வேறு சமூக வலைதளங்கள், பிரவுசர்களில் வழங்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதி ஒருவழியாக மெசஞ்சரில் வழங்கப்பட்டுவிட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் டார்க் மோட் வசதி பற்றி அறிவித்த ஃபேஸ்புக் தற்சமயம் இந்த அம்சத்தினை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். என இருபெரும் இயங்குதளங்களை பயன்படுத்துவோர் இனி இரவு நேரங்களில் சாட் செய்யும் போது டார்க் மோட் வசதியை செயல்படுத்திக் கொள்ளலாம்.

மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை ஆக்டிவேட் செய்வதற்கான பணியினை ஃபேஸ்புக் மிக எளிமையாக செய்துவிட்டது. மெசஞ்சரில் சாட் செய்யும் போதே, டார்க் மோட் வேண்டும் என்போர் சாட் ஸ்கிரீனில் இருந்தபடி நிலா எமோஜியை அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும் டார்க் மோட் ஆக்டிவேட் ஆகிவிடுகிறது.

Messenger-Dark-Mode-1

டார்க் மோட் ஆக்டிவேட் ஆகியிருப்பதை உணர்த்த “You Found Dark Mode!” எனும் வாக்கியம் திரையில் தோன்றுகிறது. இனி டார்க் மோடை ஆக்டிவேட் செய்வதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்து பின், டார்க் மோடை செயல்படுத்தவும். உடனே மெசஞ்சரில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்ய நீங்களும் நிலா வடிவம் கொண்ட எமோஜியை அனுப்பலாம். ஆனால் இது சீராக இயங்க உங்களது மெசஞ்சர் செயலி அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

குறிப்பு:

ஆண்ட்ராய்டு சாதனங்களில் மெசஞ்சர் செயலியை அப்டேட் செய்ய கூகுள் பிளே ஸ்டோர் சென்று மெசஞ்சர் செயலியை தேர்வு செய்து அப்டேட் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்யவும்.

ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அப்டேட் செய்ய ஐபோனினை கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும். பின் ஐடியூன்ஸ் சென்று சாதனத்தை தேர்வு செய்து பின் சம்மரி ஆப்ஷனில் அப்டேட் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி டவுன்லோடு மற்றும் அப்டேட் ஆப்ஷனை க்ளிக் செய்தால் செயலி அப்டேட் ஆகிவிடும்.

2 Comments

Comments are closed.