கருவில் இருக்கும் சிசுவிற்கு இன்ஸ்டாகிராமில் 1.15 லட்சம் ஃபாளோவர்கள்

சமூக வலைதள வளர்ச்சி நம் மக்கள் மீது அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில உலக நிகழ்வுகளை பார்க்கும் போதோ அல்லது கேள்விப்படும் போதோ மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா என்ற கேள்வி நம் மனதில் நிச்சயம் எழும்.

அந்த வரிசையில் கிட்ஃபிளுயென்சர்கள் (kidfluencers) இணைந்திருக்கின்றனர். பிறக்கயிருக்கும், பிறந்து ஒன்றிரண்டு ஆண்டுகளான குழந்தைகளைத் தான் கிட்ஃபிளுயென்சர் என அழைக்கின்றனர். பச்சிளங்குழந்தைகள் ஏன் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?

இம்மாதம் (மார்ச் 2019) பிறக்க இருக்கும் சிசு பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் துவங்கப்பட்டு இருக்கிறது. ஹால்ஸ்டன் பிளேக் என்ற பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டினை இதுவரை சுமார் 1.15 லட்சம் பேர் ஃபாளோ செய்கின்றனர். அதில் ஒரு போஸ்ட் மட்டுமே பதிவிடப்பட்டு இருக்கிறது.

கருவில் இருக்கும் சிசுவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டின் ஒற்றை போஸ்ட்டில் `குடும்பத்தில் புது உறுப்பினர் நான். மார்ச் மாதம் நான் இங்கிருப்பேன். இது என் குடும்பத்தாரின் இன்ஸ்டாகிராம் முகவரிக்கள்’ என பதிவிடப்பட்டு இருக்கிறது. குழந்தையின் இன்ஸ்டாகிராம் கணக்கில் முதல் மற்றும் ஒற்றை போஸ்ட்டினை இதுவரை சுமார் 40,000-க்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கின்றனர்.

இதே குடும்பத்தை சேர்ந்த 2 வயதான இரட்டை குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு சுமார் 20 லட்சத்திற்கும் அதிக ஃபாளோவர்கள் இருக்கின்றனர். குழந்தைகளின் தந்தையான கைலர் ஃபிஷர் இரட்டை குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களில் விளம்பர போஸ்ட்களை பதிவிட 10,000 முதல் 20,000 டாலர்கள் வரை செலவாகும் என தெரிவித்தார்.

Halston-Insta

ஃபிஷர் குடும்பத்தார் சமூக வலைதளம் மூலம் வருவாய் ஈட்டி வருவது நல்ல விஷயமாக தெரிந்தாலும், கருவில் இருக்கும் போதே குழந்தையின் விவரங்களை பதிவிடுவது நல்லது தானா? இது குழந்தையின் தனியுரிமையை பாதிக்காதா? என்ற வகையில் கேள்விகள் எழுந்துள்ளன.

விவரம் அறியாத இரட்டை குழந்தைகள் செய்யும் காரியத்தால் அவர்களை கிட்ஃபிளுயென்சர்கள் என்கின்றனர். ஆனால் இவர்களது வயதுடைய மற்ற குழந்தைகளுக்கு இன்ஸ்டாகிராம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கு சமூக வலைதளம் குறித்து எவ்வித ஆர்வமோ அல்லது புரிதலோ நிச்சயம் இருக்காது.

இதுபற்றி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் கிட்ஃபிளுயென்சர்களின் இலக்கு பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆக இருப்பவர்களும் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிரபலமான பிராண்டுகளாக அறியப்படும் வால்மார்ட், மேடெல் மற்றும் ஸ்டேப்பிள் உள்ளிட்டவை இதுபோன்ற கிட்ஃபிளுயென்சர்கள் வாயிலாக தங்களது பொருட்களை விளம்பரம் செய்ய துவங்கி இருக்கின்றன. பொதுவாக இதுபோன்ற விளம்பரங்கள் 25 முதல் 44 வயதுடைய பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆகவிருப்போரை குறிவைக்கிறது.

பெற்றோர் தங்களது குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வமும் மகிழ்ச்சியும் அடையலாம். மேலும் இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு பெரிய பிராண்டுகளிடம் இருந்து காசோலை அல்லது இன்னும் பிற சலுகைகள் கிடைக்கலாம். ஆனால் இதுபோன்ற செயல்கள் குழந்தைக்கு எந்நேரத்திலும் ஆபத்தாகவே அமையும்.

2 Comments

Comments are closed.