மூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்

உலக கேமிங் சந்தையில் பிரபல நிறுவனங்களாக இருக்கும் இ.ஏ. மற்றும் ரிஸ்பான் எண்டர்டெயின்மென்ட் இணைந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் எனும் புதிய ராயல் கேமினை அறிமுதம் செய்தன.

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் வெளியான முதல் 72 மணி நேரத்தில் (மூன்று நாட்கள்) சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கேமினை விளையாட துவங்கியுள்ளனர். ஸ்மார்ட்போன்களில் பிரபல கேம்களாக இருக்கும் பப்ஜி மற்றும் ஃபோர்டநைட் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அபெக்ஸ் லெஜண்ட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சோனியின் பிளே ஸ்டேஷன் 4 (PS4) கன்சோல்கள், மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கணினிகளில் கிடைக்கிறது. எனினும், பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களிலும் கிடைக்கிறது.

வெளியான மூன்று நாட்களில் அதிகளவு வரவேற்பை பெற்றிருந்தாலும், அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கடக்க வேண்டிய தூரம் அதிகமே. நவம்பர் 2018 வரை ஃபோர்ட்நைட் விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை தினமும் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை இரண்டு கோடியாக இருக்கிறது.

அந்த வகையில் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களின் பயனர் எண்ணிக்கையை அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கடக்குமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.