ஃபேஸ் அன்லாக் மற்றும் டூயல் ஏ.ஐ. கேமரா வசதியுடன் ஹூவாய் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் நிறுவனம் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. புதிய வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இடம்பெறாத நிலையில் பாதுகாப்பிற்காக ஃபேஸ் அன்லாக் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Huawei-Y7-Pro-2019-Blue

ஹூவாய் வை7 ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 1520×720 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போன் அரோரா புளு மற்றும் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 171 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.