தீவிர சோதனையில் சியோமியின் 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போதே இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்தார்.

லின் பின் தனது வெய்போ அக்கவுன்ட்டில் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு பை இயங்குதளத்தின் ஸ்டாக் வெர்ஷனை கொண்டு இயங்கும் என்றும் இதில் 5ஜி நெட்வொர்க் வசதி வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. அதன்படி ஸ்மார்ட்போனின் வலது புற மேல்பக்கம் 5ஜி நெட்வொர்க் காணப்படுகிறது.

சியோமி Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் அறிமுகமாகும் போது ஆன்ட்ராய்டு 9 பை மற்றும் சமீபத்திய MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கலாம். புதிய 5ஜி வேரியன்ட் சிறப்பம்சங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்குமா அல்லது, பழைய சிறப்பம்சங்களுடன் வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனையும், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேம்படுத்தப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் அதிக சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கியது.

இதை வைத்து பார்க்கும் போது Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் Mi மிக்ஸ் 3 போன்ற வடிவமைப்புடன், புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.